என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஹமீத் நிகல் அன்சாரி
நீங்கள் தேடியது "ஹமீத் நிகல் அன்சாரி"
பாகிஸ்தானில் இருந்து திரும்பிய ஹமீத் நிகல் அன்சாரி தனது குடும்பத்தினருடன் மத்திய மந்திரி சுஷ்மாவை சந்தித்து கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். #HamidNehalAnsari #SushmaSwaraj
புதுடெல்லி :
பாகிஸ்தானில் உள்ள தனது சமூக வலைத்தள தோழியை 2012-ம் ஆண்டில் சந்திக்க சென்றிருந்த மும்பை சாப்ட்வேர் என்ஜினீயர் ஹமீத் நிகல் அன்சாரி (வயது 33), சட்டவிரோதமாக அந்த நாட்டுக்கு சென்றதாக கைது செய்யப்பட்டார். தண்டனை முடிந்து நேற்றுமுன்தினம் அவர் நாடு திரும்பினார்.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை அவர் குடும்பத்தினருடன் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு உணர்வுமயமாக இருந்தது.
சுஷ்மா சுவராஜ், அன்சாரியை தாய் போல தழுவி, தட்டிக் கொடுத்தார். அப்போது அவர், ‘‘என்னை மன்னித்து விடுங்கள். நன்றி அம்மா’’ என்று கூறினார்.
தனது பாகிஸ்தான் அனுபவங்களை சுஷ்மா சுவராஜிடம் பகிர்ந்து கொண்டபோது அவரது கன்னங்களில் கண்ணீர்த்துளிகள் உருண்டோடின.
அப்போது சுஷ்மா சுவராஜ், ‘‘உங்களிடம் நிறைய துணிச்சல் இருக்கிறது. நீங்கள் மன்னிப்பு கேட்கக்கூடாது’’ என குறிப்பிட்டார்.
அன்சாரி விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ் தனிப்பட்ட முறையில் அக்கறையுடன் கவனம் செலுத்தி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்காக அன்சாரியின் தாயார் பாஜியாவும் சுஷ்மா சுவராஜூக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். #HamidNehalAnsari #SushmaSwaraj

×

X